மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் எர்டிகா எம்பிவியின் விலையை உயர்த்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக எர்டிகாவின் விலையை 13 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பின் 8 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் முதல் 13 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.