சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான ஐபிஎல் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பிளே – ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ஐதராபாத் அணி இழந்தது.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் 55வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2வது பாதி தொடங்குவதற்கு முன்னதாகவே மழை பெய்யத் தொடங்கியது.
மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மைதானத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுவதாகம் அறிவிக்கப்பட்டது.
இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.