தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
தெலங்கானா மாநிலத்தின் ஜக்தியால் மாவட்டத்திற்குட்பட்ட கொருட்லா, ஆதர்ஷ் நகர்,கரீம் நகர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 3 புள்ளி 8ஆக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.