இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து பும்ராவை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அந்த தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடிக்கடி அவருக்குக் காயம் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.