எங்களின் பிளே-ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இந்த போட்டியின் போது நாங்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம் என்றும், முக்கியமான நேரங்களில் கேட்சை தவறவிட்டால் அதற்காகக் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் சரியான இடத்தில் பந்துவீச வில்லை என்று நினைப்பதாகவும், அதுவே தோல்விக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.