கேரளாவில் தெரு நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி ரேபிஸ் தாக்குதலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் என்ற 7 வயது சிறுமியைத் தெருநாய் கடித்தது.
இதையடுத்து அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் 3 டோஸ் தடுப்பூசிகளும் சிறுமிக்குப் போடப்பட்டு நிலையில், திடீரென காய்ச்சல் அடித்தது. இதையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது. கடந்த சில வாரங்களில் ரேபிஸ் நோயால் கேரளாவில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.