குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சபரிமலையில் மே 18, 19ஆம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மாதந்திர பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 19ஆம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரும் 18ஆம் தேதி சபரிமலைக்கு வருகை தரவுள்ளதாகவும், 19ஆம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மே 18, 19ஆம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.