பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
லப்பைக்குடிக்காட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்கள் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது.
விசாரணையில் அதே வங்கியில் நகைக்கடன் பிரிவு அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த ஆகாஷ் சௌகான் என்பவர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.