வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது உறவினர் ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மனு அளித்தார்.
வேப்பங்குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தேவசகாயம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் ஆவேசத்துடன் பேசிய அவர், தனது மைத்துனன் தன்னிடம் பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் போலீசார் முறையாக விசாரிப்பதில்லை எனவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.