தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் சரணடைந்தனர்.
மதுரையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சரண்யா என்பவர், பாலன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு தஞ்சை மாவட்டம் உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சரண்யா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சரண்யாவை கொலை செய்ததாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவிக்குப் பிறந்த கபிலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாகக் கொலை செய்ததும் சரண்யாவின் 2-வது கணவர் பாலன் கொலை சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது.