பாகிஸ்தானுக்குப் பதிலடி நிச்சயம் என மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுத்தத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த போர் ஒத்திகை நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின் படி நாடு முழுவதும் 244 இடங்களில் நடைபெற உள்ள போர் ஒத்திகை எப்படி நடக்கும்? அந்த ஒத்திகையின் போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மத்திய அரசு, நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடு தற்போது என்ன நிலையில் இருக்கிறது? என்ன மாதிரியான அச்சுறுத்தலில் இருக்கிறோம் ? மக்களைப் பாதுகாக்க அரசு என்னமாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறது என்பதற்கான பல்வேறு நிலைகளில் ஒன்று தான் இந்த போர் ஒத்திகை நிகழ்வு.
Air Raid Warning Sirens எனச் சொல்லக்கூடிய வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரனை ஒலிக்கச் செய்வது தான் முதல் பயிற்சி. எதிரி நாட்டோட விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் வகையில் சைரன் ஒலி எழுப்பப்படும். அந்த சத்தம் கேட்டவுடன் பொதுமக்கள் தாங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
இரண்டாவது CIVILIAN AND STUDENT TRAINING என அழைக்கப்படக் கூடிய தாக்குதல் நடைபெற்றால் தங்களைத் தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இப்ப இருக்கக் கூடிய தலைமுறை போரை பார்த்திருக்க வாய்ப்பில்ல. அப்படி இருக்கச் சூழல்ல இந்த பயிற்சி ரெம்ப முக்கியமானது. பொதுவாக எதிரி நாட்டோட விமானங்கள் வெளிச்சமா இருக்க இடத்த தான் குறிவைச்சு ஏவுகணைகளை ஏவுவாங்கனு சொல்லப்படுது. அப்படியான சூழலில் இரவு நேரங்களில் மின் விளக்கை அணைத்து அவர்களின் இலக்கை சிதறச் செய்யலாம். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது இந்த பயிற்சியோட முக்கியமான நோக்கம்.
CRASH BLACK OUT MEASURES எனப்படும் விபத்து கால தடுப்பு நடவடிக்கைகள் தான் மூன்றாவது பயிற்சி – போர் நடைபெறுவதற்கான அலர்ட் வரும் பட்சத்தில் பதற்றமடையாமல் இருப்பதற்கான நடைமுறை தான் இது. போர் நடைபெறுவதற்கான சூழல் வரும் போது என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகளின் திறனுக்கு ஏற்ப இந்த பயிற்சி வழங்கப்படும்
CAMOUFLAGING OF VITAL PLANTS எனப்படும் முக்கிய ஆலைகள் மற்றும் ஆயுத கிடங்குகளை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு தான் நான்காவது பயிற்சி – போரின் போது விமான நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என ஒரு அரசு இயங்குவதற்குத் தேவையானதாகக் கருதப்படும் முக்கியமான இடங்களை குறிவைத்துத் தாக்குதல் நட த்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அது போன்ற முக்கியமான இடங்களை மறைத்து வைப்பதோடு, அது போன்ற அலுவலகங்கள் அங்கிருந்ததற்கான சுவடுகளே இல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
Evacuation Plan Updates and Rehearsals எனும் மீட்பு பணி தான் ஐந்தாவது பயிற்சி – என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அதனையும் மீறி ஒருவேளை தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அதில் காயமடையும் பொதுமக்களை காலதாமதமின்றி அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான பயிற்சி தான் இது.
இந்த ஐந்து பயிற்சியையும் தெரிந்து கொள்வதோடு, இதுபோன்ற முக்கியமான காலகட்டங்கள்ல விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தேச விரோதமாகவே கருதப்படுகிறது. போர் ஒத்திகை பயிற்சியின் போது நாட்டு மக்களையும், இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டி நாம எல்லாரும் ஒரே நேர்கோட்டில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.