பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் திட்டமான ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.
பஹல்காமில் கடந்த மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. உடனடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் அழித்தது.
மேலும் அதிரடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தயாராகி வரும் நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை முழுவதுமாக பிரதமர் மோடி கண்காணித்து வரும் நிலையில், தாக்குதல் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களிடம் தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.