ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய பாதுகாப்புப் படை குறிவைத்துத் தாக்கிய பயங்கரவாதிகளின் அமைப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாதி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெஹ்மூனா ஜோயா வசதிமர்கஸ் அஹ்லே ஹதீஸ் பர்னாலாமஸ்கர் ரஹீல் ஷாஹித்ஷவாய் நல்லா கேம் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாக் அம்ரூ, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.