விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் சுமைகளை மட்டுமின்றி 140 கோடி இந்திய மக்களின் கனவுகளைச் சுமந்து செல்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல எனக் கூறினார்.
விண்வெளி என்பது ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பிரகடனம் எனத் தெரிவித்தார். 1963ல் ஒரு சிறிய ராக்கெட்டை ஏவியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது வரை இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.
மேலும், விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் சுமைகளை மட்டுமின்றி 140 கோடி மக்களின் கனவுகளைச் சுமந்து செல்கிறது எனக் குறிப்பிட்டார்.