பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசனின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் பாகம் 1 வெளியானது.
இதனை தொடர்ந்து ஸ்குவிட் கேம் 2-வது சீசனும் வெளியானது. இந்த சூழலில், ஜூன் 27 ஆம் தேதி ஸ்குவிட் கேம் – 3 வெளியாகும் என்றும், இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், அதன் டீசரை வெளியிட்டுள்ளனர்.