ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
அதற்கு, மத்திய அமைச்சர்கள் மேசையைத் தட்டி பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.