திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களைக் குறிவைத்து வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னவனூர் அருகே சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டுத் திரும்பிய, சுற்றுலா வாகன ஓட்டுநர் சாதிக் என்பவரின் வாகனத்தை 3 பேர் கும்பல் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றது.
அவர்களிடமிருந்து தப்பிய சாதிக் சம்பவம் தொடர்பாகக் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் 18-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்களிடம் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.