பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் விலை குறைவான 400 சிசி பைக்கான பல்சர் NS400Z பைக்கை அப்டேட் செய்யவுள்ளது.
இந்த புதிய பைக்கின் இன்ஜினை OBD-2B விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்திருக்கிறது. இதனால் பைக்கின் பெர்ஃபாமன்ஸில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.
BS-6 இரண்டாம் கட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் ஒரு பகுதியாகவே இந்த அப்டேட் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் விலை1 புள்ளி 90 லட்சம் அல்லது அதனையொட்டிய விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.