டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
“ஆப்ரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் குறித்தும், எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி, விரிவாக எடுத்துரைத்தார்.