140 கோடி இந்தியர்களின் சிகரமாகப் பிரதமர் மோடி விளங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் அவர் அளித்த பேட்டியில்,
140 கோடி இந்தியர்களின் சிகரமாகப் பிரதமர் மோடி விளங்குகிறார் என்றும் நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட இன்று மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழக பாஜக சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தவர், எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும் என்றும் 2026 தேர்தலில் ‘வெற்றிவேல் வீரவேல்’ எனும் ஆப்ரேஷனை ஆரம்பிப்போம்” யரன் அவர் கூறினார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.