பாகிஸ்தான் தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரோஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பயங்கரவாத இயக்கத் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைப்பேசியில் பேசினார். “ஆப்ரேஷன் சிந்தூர்” குறித்து விளக்கமளித்த அவர், எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை எனத் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படக் கூறினார்.