“ஆப்ரேஷன் சிந்தூர்” தாக்குதலில் பலியான தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், ISI பங்கேற்றது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும், அவரின் உதவியாளர்கள் 4 பேரும் பலியாகினர். இந்த நிலையில், முர்டி பகுதியில் நடைபெற்ற உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், ISI பங்கேற்றது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் தீவிரவாதி உடலைக் கொண்டு செல்லும் சவப்பெட்டியின் மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.