தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 95.03 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகளில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் அறிவித்தார்.
+ 2 பொதுத்தேர்வில் வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 93.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் பொதுத்தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில், 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 96.70 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.