மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அய்யமுத்தன்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பூலான்கட்டு கண்மாய் அமைந்துள்ளது. கண்மாய் நீரை பயன்படுத்தி 300 ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில், கோடை காலம் நெருங்கியதை அடுத்து கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பூலான்கட்டு கண்மாய் அருகே உள்ள கோயிலில் ஊர் பெரியவர்கள் சாமி தரிசனம் செய்தபின் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர்.