அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பிரசித்திபெற்ற கருணாம்பிகை அம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த கோயிலில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், சிகர நிகழ்வான அவிநாசிலிங்கேஸ்வரர் தேர் திருவிழா நடைபெற்ற நிலையில், அமைச்சர் சாமிநாதன் பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ரத வீதிகள் வழியாகத் தேரில் பவனி வந்த அவிநாசிலிங்கேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று மனமுருகி வழிபட்டனர்.