அதர்வா நடித்த DNA படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் DNA. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.
படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சூழலில் இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.