இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஐபிஎல் தொடர் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக நேற்று தர்மசாலாவில் பஞ்சாப் – டெல்லி இடையே நடைபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன் எதிரொலியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளை ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.