சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் புதன்கிழமை போர்க்கால ஒத்திகை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது.
இதில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், தமிழ்நாடு காவல்துறை என அனைவரும் இணைந்து ஒத்திகையை மேற்கொண்டனர்.
அப்போது எதிரிகள் தாக்குதல் நடத்தினால் மக்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை அரங்கேற்றப்பட்டது.