குஜராத் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு குஜராத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலை பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது குஜராத் மக்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.