காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை என இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இப்பிரச்சனைக்கு மதச்சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், சர்வதேச நிதியத்தில் நடக்கும் கூட்டத்தில் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று கூறிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.