நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 20வது ரோஜா கண்காட்சி தொடங்குகிறது.
உதகையில் கோடை விழா முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து, உதகையில் உள்ள ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கி வரும் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
இதனையொட்டி நான்காயிரம் வகைகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை, டால்பின், முத்து, சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ண, வண்ண ரோஜா மலர்கள் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.