இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடன் பேசியதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.