இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாயும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ராணுவ மோதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் ஜி7 நாடுகள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக பதற்றத்தைக் குறைத்து, அமைதியான முடிவை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரடி உரையாடலில் ஈடுபட இருநாடுகளை ஊக்குவிக்கவும் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் அழைப்பு விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.