ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அங்குப் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.