திருப்பூரில் இளம் பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. 50 வயதான இவருக்குத் திருமணமாகாத நிலையில், வீட்டின் அருகே உள்ள சிவசுப்பிரமணியன், அந்தோணி மற்றும் வீரமணி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திருமணம் செய்து வைப்பதாக ஆரோக்கியசாமியிடம் கூறினார்.
அதற்காகச் சொந்த வீட்டை விற்று 15 லட்சம் ரூபாயை மூவரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பெண் உட்பட நால்வர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.