மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியவர்களைக் கைது செய்யப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
குருவித்துறை கிராமத்தில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. அப்போது இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மூன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கார்த்திக் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமியைக் கத்தி, அரிவாளுடன் தாக்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியல் செய்தனர்.