எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயலும் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என இந்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளின் எல்லைகளில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயலும், இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் எனவும், அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.