சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக மே 18 மற்றும் 19-ம் தேதிகளில் பொது தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால், இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.