போர் நிறுத்தத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
May 10, 2025, 06:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையின் வாயிலாக சுமூக தீர்வு காணவும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்கா நடத்திய நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதாகவும், சிறந்த புத்திசாலித்தனத்துடன் செயல்பட்ட இரு நாடுகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தாரும், இந்தியாவுடனான போர் நிறுத்த நடவடிக்கை அமலுக்கு வந்ததை உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாகவும், பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டப் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: pakistanindia pakistanIndia and Pakistan agree to ceasefire: US President Trump's announcement
Share
Tweet
SendShare
Previous Post

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

Next Post

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies