ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா, ஆப்கன் மண்ணிலும் இந்தியா ஏவுகணைகளை வீசியதாகப் பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஹீரியத் வானொலியில் தெரிவித்துள்ளார்.