பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்- இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவால் கொல்லப்பட்ட முடாசர் காதியன் காஸ் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவருடைய இறுதிச்சடங்கில் மிகப் பெரிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமை தாங்கினார்.
மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புயடை ஹபீஸ் முகமது ஜமீல் என்பவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர் ஆவார். இதேபோல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய முகமது யூசுப் அசார் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். இவர் விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.
இந்தியாவால் கொல்லப்பட்ட காலித் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவர் ஜம்மு – காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களிலும், ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டார். இவருடைய இறுதிச்சடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய முகமது ஹசன் கான் என்பவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெ.எம். இயக்கத்தின் செயல்பாட்டுத் தளபதியான முஃப்தி அஸ்கர் கானின் மகன் ஆவார்.
ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இத்தகைய முக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடி உள்ளது.