எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இரவு 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாலை 5 மணிக்குப் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் கேட்டுக்கொண்ட அவர், நிலைமையைப் புரிந்து கொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எச்சரித்தார்.
மேலும், நிலைமை குறித்து ராணுவம் மிகுந்த விழிப்புடன் கண்காணித்து வருவதாகவும், சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் நிகழும் மீறல்களை அதிக பலத்துடன் கையாள ராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.