கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் மின்மாற்றியில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.