ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் யானை, வரையாடு, மான், புலி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட அரியவகை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் மழைக் காலத்திற்கு முந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
வரும் 17ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் 186 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விலங்குகளின் எச்சம், காலடி தடம் மற்றும் கண்ணெதிரே தென்படும் விலங்குகளின் எண்ணிக்கை அடிப்படையிலும், ஜிபிஎஸ் கருவி மூலமாகவும் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.