எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களைப் பிரதமர் மோடி நடத்தினார்.
பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்த பிரதமர் மோடி, மறுபுறம் 150க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி ஒருமணி நேரம் தான் உறங்கியதாகவும், உணவையும் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
வெந்நீர் பருகியபடியே ஆலோசனைக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதிக பிரச்சனை, நெருக்கடி வரும்போது குஜராத்தில் உள்ள அம்பா தேவி அம்மனை வழிபடும் பிரதமர் மோடி, அதுபோன்ற நேரங்களில் தனக்கு நெருக்கமான மூத்த அதிகாரிகள் இருவருடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுவதாகவும் மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.