ராமநாதபுரம் மாநகர் பகுதியில் முழங்கால் அளவு சாக்கடைக்குள் இறங்கிப் பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியாளர், துப்புரவு பணியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடை குழாய்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு தெருக்கள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் முழங்கால் அளவு சாக்கடைக்குள் இறங்கிப் பாதுகாப்பற்ற முறையில் வெற்று கரங்களால் தூய்மைப் பணியாளர் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.
எனவே, தூய்மை பணியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.