கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர்களுக்காகச் சட்டவிரோதமாக ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டன்கொட்டாய் கிராமத்தில் 14 வீடுகள் உள்ள நிலையில், மலைப் பாதையையொட்டி 2 கல்குவாரிகள் செயல்படுகின்றன. பட்டா நிலங்களில் பாதை அமைத்து கல்குவாரி வாகனங்கள் சென்று வந்த நிலையில், விளைநிலங்களில் பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கல்குவாரி உரிமையாளர்களுக்காகச் சட்டவிரோதமாக ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்துள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.