இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், கோயில் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையைத் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் நகர்ப் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டு நகரின் மொத்த நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விமான நிலையம், அனல்மின் நிலையம், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.