மதுரை உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
கல்புளிச்சான்பட்டி பகுதியில் உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கிடா முட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன.
இந்த போட்டியில் பங்கேற்ற கிடாக்களுக்குக் கிராம கமிட்டி சார்பில் சில்வர் அண்டாவும், போட்டியில் வெற்றி பெறும் கிடாக்களுக்குப் பித்தளை அண்டாவும் பரிசாக வழங்கப்பட்டது.
70 முறை அதிகப்படியாக மோதி வெற்றி பெற்ற கிடாக்களுக்குச் சிறப்புப் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.