நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள் சுவாமி கோயில் சித்திரை தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இளையபெருமாள் சுவாமி என்னும் பிரசன்ன வேங்கடரமண சுவாமி கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏழாம் நாள் நிகழ்ச்சியில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பூதேவி, ஸ்ரீதேவியுடன் இளையபெருமாள் திருத்தேரில் எழுந்தருளியுடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மலையைச் சுற்றித் தேர் வலம் வந்தபோது உப்பு, வெல்லம், நிலக்கடலை, மாம்பழம், வாழைப் பழம், கத்தரிக்காய் போன்றவற்றை சூறையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.